சாலையில் குழி

Update: 2026-06-14 13:40 GMT

கூடலூர் அத்திப்பாளி வயல் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும். ஆனால் அந்த சாலையில் திடீரென குழி ஏற்பட்டு உள்ளது. அதை முறையாக மூடாமல் மரக்கிளைகளை போட்டு மூடி உள்ளனர். இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையில் உள்ள குழியால் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. அதுவும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்காது என்பதால், விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சாலையில் உள்ள குழியை உடனடியாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்