கோவை மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட வி.ஜி.ராவ் நகர் 2-வது வீதியில் உள்ள சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இதனால் தார்சாலை இருந்த இடமே தெரியாத அளவிற்கு மண் சாலை போல காணப்படுகிறது. அத்துடன் குண்டும், குழியுமாக கிடப்பதால் அந்த வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.