சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-05-17 13:17 GMT

தர்மபுரி நகரில் அதிக வாகன போக்குவரத்து கொண்ட வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை இந்த சாலையில் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தார்சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி வழியாக செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த சாலையை முறையாக சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்