விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-05-17 12:42 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மேஜர் சரவணன் சிலை வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்