வெள்ளக்கரை அடுத்த ஒதியடிக்குப்பம் பிரதான சாலையில் அமைந்துள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் சிக்கி கீழே விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டியது அவசியம்.