விருத்தாசலம் அடுத்த அணைக்கட்டு சாலையில் இருந்து மே.மாத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து அடிக்கடி விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.