தார்சாலையாக மாற்றியமைக்க கோரிக்கை

Update: 2026-01-04 11:50 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ரேஷன் கடையில் இருந்து ஏரிக்கரை வழியாக குன்னம் காவல் நிலையம் வரும் சாலை, பழைய தாலுகா அலுவலகம் செல்லும் சாலை மற்றும் போலீஸ் நிலையத்தில் இருந்து குன்னம் மெயின் ரோட்டிற்கு வரக்கூடிய சாலை உள்ளிட்ட சாலைகள் நீண்ட நாட்களாக மெட்டல் சாலையாகவே உள்ளது. இதனால் அந்த சாலைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலைகளை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்