குண்டும், குழியுமான சாலை

Update: 2025-12-28 16:18 GMT

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தை பேட்டை-கச்சுப்பள்ளி செல்லும் சாலையில் பண்டாரத்தான்காடு பகுதியில் இருந்து திருவல்லிபட்டியான்காட்டுவளவு பகுதி வழியாக சென்று இளம்பிள்ளை-கச்சுபள்ளி செல்லும் சாலையில் தாடிகாரனூர் பகுதியில் இணைகிறது. இந்த இணைப்பு சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. இவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சாலையை சீரமைக்ககோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சாலையை புதுப்பித்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்