சேறும், சகதியுமான சாலை

Update: 2025-12-14 11:41 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அய்யம்பட்டி பொன் நகர் பகுதியில் சமீபத்தில் போடப்பட்ட மண்சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மழை பெய்யும் நேரங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். சில இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்