அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் அய்யப்பன் கோவில் தெரு வ.உ.சி. நகரில் உள்ள தார்சாலை போடப்பட்டு பல வருடங்கள் ஆனதால் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.