இருளில் மூழ்கும் சாலை

Update: 2025-12-07 12:21 GMT

தர்மபுரி-சேலம் சாலையில் இலக்கியம்பட்டி முதல் கலெக்டர் அலுவலகம் வரை அதிக வாகன போக்குவரத்து காணப்படுகிறது. இந்த நிலையில் இலக்கியம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் சாலையின் மையத்தடுப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இந்த பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்குகிறது. இதன் காரணமாக சாலையில் செல்பவர்கள் போதிய வெளிச்சம் இல்லாமல் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே இந்த பகுதியில் இரவு நேரத்தில் சாலையின் மையத்தடுப்பில் மின்விளக்குகள் எரிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்