சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் உள்ள நெடுஞ்செழியன் தெருவில் போடப்பட்ட சாலை பெயர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.