செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட ராணி அண்ணா நகர், 2-வது தெருவில் சாலையின் இருபுறமும் திறந்தவெளி கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. திறந்த நிலையிலேயே காணப்படும் கால்வாய்களால் பல நேரங்களில் மாடுகள் விழுந்து எழ முடியாமல் தவிக்கிறது. அப்பகுதி பொதுமக்களுக்கு ஆபத்தாக உள்ள இந்த திறந்தவெளி கால்வாய்களுக்கு மேல் மூடி அமைக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.