சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள மதுரைவீரன் கோவில் அருகே வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து மதுரைவீரன் கோவில் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.