அந்தியூர் அருகே பிரம்மதேசம் கிராமத்தில் பழைய ஊராட்சி அலுவலகம் முதல் மாரியம்மன் கோவில் பின்புறம் வரை உள்ள சாலைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல மிகவும் அல்லல்படுகின்றனர். எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.