குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் இருந்து ராணுவ பகுதிக்கு செல்லும் பிரதான சாலையை சீரமைப்பதாக கூறி பெயர்த்து போட்டு உள்ளனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை சாலையை சீரமைக்கவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாலையை விரைவாக சீரமைக்க முன்வர வேண்டும்.