செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மேடவாக்கம் மின்சார அலுவலக சாலையில் அமைந்துள்ள பாபு நகரில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. விபத்துகளை சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் இந்த சாலைகள் வாகனஓட்டிகளுக்கு பெருத்த சவாலாக இருக்கிறது. பல்லாங்குழியான இந்த சாலைகளில் மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க துறை சார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.