சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகர் 1-வது தெருவில் 100-மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த சாலைதான் அங்குள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்து, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுக்கும் ஆபத்தானநிலை இருக்கிறது. அதிகாரிகள் வந்து சரிசெய்வதும், ஆனால் குறுகிய காலங்களிலேயே மீண்டும் பள்ளங்கள் தென்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் இந்த பகுதியின் மழைநீர் வடிகால் மூடியின் ஓரங்களில் அமைந்துள்ள பள்ளங்களை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.