விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் மீன் மார்க்கெட் பின்புறம் உள்ள பாரதியார் நகர் சாலையானது மழையால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பொதுமக்களின் நலன் கருதி சேறும் சகதியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.