விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-10-26 11:45 GMT

அரியலூர் நகரில் இருந்து திருச்சி செல்லும் சாலை முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வீடுகள், கடைகள், பள்ளிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இதனால் இந்த சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படும். பள்ளி மாணவ-மாணவிகள் அதிகம் சென்று வரும் இந்த சாலையில் ஒரு சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்