ஈரோடு முனிசிபல் காலனியில் இருந்து பாரதி தியேட்டர் சாலைக்கு செல்லும் வளைவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடிவதில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.