அரியலூர் நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்றாக புது மார்க்கெட் தெரு உள்ளது. இந்த தெருக்களில் உள்ள சாலைகள் முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை போடப்பட்டது. ஆனால் இந்த சாலை அமைக்கப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில், தற்போது இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை புதுப்பித்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.