கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள குமரன் அரசு பள்ளி அருகே நரசிம்மபுரம் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பள்ளி உள்ளதால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வர்ணம் பூசப்படாத வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.