புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே கைக்குறிச்சி வடபகுதியில் உள்ள முஸ்லிம் தெரு செல்லும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் தார்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.