சாலை வசதி வேண்டும்

Update: 2025-10-12 11:42 GMT

அரியலூர் மாவட்டம் கீழநத்தம் ஊராட்சி என்.எஸ்.பி. நகரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலை முழுமையாக சேதம் அடைத்து மண்சாலையாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பாதசாரிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்