குண்டும், குழியுமான சாலை

Update: 2025-10-12 11:31 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள துவார் கிராமத்தில் இருந்து கறம்பக்குடி செல்லும் சாலையில் மாங்கான்கொள்ளப்பட்டி வரையுள்ள 2 கி.மீ. பிரிவு சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது முற்றிலும் சிதிலமடைந்து மண்சாலைபோல் காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்குகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்