சேறும், சகதியுமான சாலை

Update: 2025-10-12 11:14 GMT

கரூர் மாவட்டம் கோப்புப்பாளையத்தில் இருந்து கட்டிப்பாளையம் வரை புகழூர் வாய்க்கால் ஓரத்தில் மண் சாலை செல்கிறது. தற்போது நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்