பந்தலூர் தாலுகா சேரம்பாடியில் உள்ள சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. புதர்களின் கிளைகள் சாலை வரை நீண்டு காணப்படுகிறது. அவை அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. அத்துடன் புதர் மறைவில் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் மறைந்து இருந்தாலும் தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. எனவே அந்த புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.