பொள்ளாச்சி அருகே ஆ.சங்கம்பாளையம் காலனி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. இதன் அருகில் உள்ள சர்வீஸ் சாலை மண் சாலை ஆகும். இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. அத்துடன் சாலையும் மழை பெய்தால் உழுத வயல் போல மாறிவிடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தார்சாலை அமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. எனவே இனிமேலாவது தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.