சேறும், சகதியுமான சாலை

Update: 2025-10-05 09:43 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் உல்லியகுடி கிராமத்தில் உள்ள இருளர் தெருவிற்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் விவசாயிகளும், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்