வடமதுரை அருகே ராயப்பன்பட்டியில் இருந்து பூண்டிமாதாநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.