களக்காடு பகுதியில் மெயின்ரோட்டில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பணிகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?