கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் - வேலாயுதம்பாளையம் செல்லும் சாலை அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்நிலையில் சேமங்கி, செல்வநகர், கவுண்டன்புதூர், முத்தனூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து நடையனூர் செல்லும் சாலை வழியாகவே செல்கின்றனர். இந்நிலையில் ரெயில்வே கேட்டில் இருந்து பேச்சிப்பாறை வரை செல்லும் சாலை சிதிலமடைந்து மண்சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.