கரூர் அருகே உள்ள சாலைப்புதூரில் சாலை ஓரத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பேவர் பிளாக் கற்களை கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையானது சாலை முழுவதும் அமைக்கப்படாமல் பாதி அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீதி நடைபாதை அமைக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நடைபாதை அமைக்கும் பணியை முழுவதும் நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.