அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் ஊராட்சி திருமானூரில் இருந்து திருவெங்கனூர் வழியாக ஆண்டவர்கோவில் வரை செல்லும் சாலை போட்ப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவசர நேரத்திற்கு ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.