சென்னை பரங்கிமலை ஜி.எஸ்.டி. சாலையை விமான நிலையம் செல்வதற்காக பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்தநிலையில் சாலையின் தரம் என்பது படுமோசமாக உள்ளது. இந்த பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைகிறார்கள். சாலையின் ஓரங்களை பயன்படுத்தியே சாலையை கடக்கும் அவலநிலை தற்போதுவரை இருந்து வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.