புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமம் கீழத்தெருவில் உள்ள மண்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.