சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-09-21 11:34 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் சுண்டக்குடியில் இருந்து வள்ளக்குளம் வழியாக நானாங்கூர் வரை செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. தற்போது புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் சாலைப் பணிகள் முடியவில்லை. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்