கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி தனியார் பள்ளி அருகே ரெயில்வே சுரங்கப்பாதைக்கு மேலே செல்லும் மண் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. மழை காலத்தில் இந்த சாலையில் மழைநீர் குளம் போல தேங்குவதால், வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது சாலை அமைப்பதற்காக மண்சாலையில் உள்ள மண் அகற்றப்பட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிகளை தொடராமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை தொடங்கி தார்சாலையாக அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.