எச்சரிக்கை பலகை அமைக்கப்படுமா?

Update: 2025-09-21 11:24 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் மஞ்சான்விடுதி ஊராட்சி வம்பனில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வழியாக செல்லும் சாலையின் குறுக்கே நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இப்பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்கப்படாமல் உள்ளதால், வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்