கொட்டாரம் பேரூராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் தெருக்களில் பதிக்கப்பட்டது. ஆனால், குழாய்கள் பதிப்பதற்காக பல தெருக்களில் உடைக்கப்பட்ட அலங்கார தரைக்கற்கள் மீண்டும் பதிக்கப்படவில்லை. இதனால் தெருக்களில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தெருக்களில் உடைக்கப்பட்ட அலங்கார தரைக்கற்களை மீண்டும் பதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.