மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையாதெரு பகுதியில் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் பருவமழையால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது. இதனால் இச்சாலையை கடந்து செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.