சாலை சரிசெய்யப்படுமா?

Update: 2025-09-14 13:24 GMT

அரியலூர் நகரில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் இணைப்பிற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. குடிநீர் இணைப்பு வழங்கிய பிறகும் பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பலத்த காற்றடிக்கும் போது புழுதி பரப்பதுடன், மழை பெய்யும் போது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த தெருக்களில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் வழுக்கி கீழே விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்