கரூர் மாவட்டம் மண்மங்கலம் செம்மடை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் ஒன்று உள்ளது. அதன் கீழ் உள்ள ரமேஸ்வரப்பட்டி, கரூர் செல்லும் தார்சாலை மிகவும் பள்ளமாக உள்ளது. இந்நிலையில் மழை பெய்யும் போது சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலை வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீரை கிழித்துக்கொண்டு செல்வதால், பாதசாரிகள் மீது தண்ணீர் தெறிக்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.