திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு, அரசூர் ஆகிய பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சர்வீஸ் சாலையை சீரமைப்பதோடு, மேம்பாலம் அமைக்கும் பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.