செஞ்சி கடைவீதியில் கடைகள் வைத்திருப்பவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.