பழனி அருகே ஆயக்குடி குட்டிக்கரடு பிரிவில் இருந்து வரதமாநதி அணை செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அங்கு வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் செல்லும் போது கடும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.