மதுரை மேல அனுப்பானடி கங்கா நகர் மற்றும் மாருதி நகரில் 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதற்கு பொருட்கள் எடுத்து செல்ல வசதியாக மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் முதல் கண்மாய் கரை பகுதி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையின் மேற்கு திசையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியிலும், கிழக்கில் அனுப்பானடி ஊரடி பகுதியிலும் 5 முதல் 20 அடி வரை சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே சாைல அமைப்பதற்கு முன்பு, அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி முழுவதுமாக தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.