கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வாங்கபாளையதில் இருந்து அரகாலனி வரை தார்சாலை போடப்பட்டது. அதன்பின் அரசு பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் வேகத்தடை உள்ளதை குறிக்கும் வகையில் வேகத்தடையின் மீது வெள்ளை வர்ண கோடுகள் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.