பெரியநாயக்கன்பாளையம் அருகே கியாஸ் கம்பெனி தெற்குபாளையம் பகுதியில் தனியார் பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் இருந்து அங்குள்ள மேம்பாலம் வரை தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. மேலும் போக்குவரத்து சிக்னலும் சரிவர செயல்படுவது இல்லை. இதன் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இருட்டை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்பு இல்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.